அனர்த்த முகாமைத்துவம்

Thursday, July 23, 2009


அனர்த்தமானது இருவழிமுறைகளில் தோற்றுவிக்கப்படலாம், இவை பெரும்பாலும் சடுதியாகவோ அல்லது மெதுவாகவோ நிகழலாம்.

01. மனிதனால் தோற்றுவிக்கப்படுபவை
உதாரணம்:- போர், நிலக்கண்ணிகள், தீ,வாகன விபத்துக்கள்.


02. இயற்கையால் தோற்றுவிக்கப்படுபவை
உதாரணம் :- வெள்ளம், வரட்ச்சி, மண்சரிவு, பூமியதிர்ச்சி, புயல், மண்ணரிப்பு, எரிமலைக் குமுறல், ஆட்கொல்லி நோய்கள், சுனாமி.






அனர்த்தத்தை கையாளுதல்

அனர்த்தம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் மீது ஏற்பட இருக்கும் அனர்த்தத்தின் தாக்கத்தை குறைக்க அல்லது தவிர்க்க முற்கூட்டியே எடுக்கப்படும் நடவடிக்கை இடர்முகாமைத்துவமாகும்.


திட்டமிடல் :- படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு அரச, அரசசார்பற்ற, உள்ளுராட்ச்சி நிறுவனங்கள் முதலான அமைப்புக்களை ஒன்றிணைத்து அனர்த்தத்தை சிறந்த முறையில் கையாள எத்தனிப்பது திட்டமிடுதலாகும்.

01. பிரதேசத்தில் ஏற்றபடக்கூடிய அனர்த்தத்தை கண்டறிதல்.
உதாரணம் கடலை அண்டிய பிரதேசமாயின் சுனாமி. மலைப்பிரதேசமாயின் மண்சரிவு

02. ஏற்பட இருக்கின்ற அனர்த்தத்தின்போது ஒவ்வொருவரும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதனை முன்கூட்டியே தயார்ப்படுத்தல். பொறுப்புக்களை நிறுவனங்கள், குழுக்களிடம் பகிர்ந்தளித்தல்.

உதாரணம் :- செய்தியறிக்கைகளை ஒரு குழு அவதானித்துக் கொண்டிருத்தல், சுனாமி தொடர்பான அறிவுத்தல்கள் வரும்போது அதனை உரியவர்களுக்கு அறிவித்து மக்களை விழிப்பூட்டல், தயார்நிலையில் உள்ள அத்தியாவசியப் பொருட்களையும், மக்களையும் ஒரு குழு பாதுகாப்பாக பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தல், இன்னோர் குழு நகர்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான முதலுதவி, அடிப்படைவசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்றவற்றை முற்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும்.


03. அனர்த்தம் ஒன்று ஏற்பட்டவுடன், முற்கூட்டியே தயார்ப்படுத்திவைத்திருக்கும் திட்டத்திற்கு அமைவாக நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

04. இவ்வாறு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஒழுங்கானமுறையிலே இடம்பெறுகின்றனவா என்பதனை அறிய மேற்பார்வை செய்தலும், கண்காணித்தலும் இடம்பெறும். இதன்போது குறைபாடுகள் கண்டறியப்பட்டு நிவர்த்திசெய்யப்படுகின்றது.



அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான மிகச்சுருக்கமான அறிமுகம் இதுவாகும்.


2 comments:

M.Rishan Shareef said...

நல்ல பதிவு !

Jeya said...

நன்றி எம்.ரிஷான் ஷெரீப் அவர்களே. உங்கள் ஆக்கங்கள் அனைத்துமே என்னைக் கவர்பவை.

Blog Widget by LinkWithin

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP