என்றோ, எங்கோ, செய்யப்பட்ட சிறு உதவி
Thursday, November 12, 2009
நீண்டதொரு காலப்பகுதியின் பின் உலகின் எங்கோ ஒரு மூலயில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றினை ஒர் உயர் அதிகாரியிடமிருந்து கேட்கும் வாய்ப்பு இன்று எனக்குக் கிட்டியது.
தாய், தந்தையினை இழந்து அனாதரவாக வாழ்ந்த சிறுவன் ஒருவன் தன் கஷ்டத்தின் மத்தியிலும், சிறு சிறு ஊழியம் புரிந்து அதில் வரும் பணத்தினை வைத்து தனது பாடசாலைக் கல்வியினைத் தொடர்ந்துகொண்டிருந்தான். இவ்வாறிருக்கையில் தொடர்ச்சியாக பல நாட்கள் வேலைகிடைக்காததினால் உண்ண உணவின்றி தவித்த இச் சிறுவன் பசியினால் மிகவும் வாட்டமுற்று, பாதையோரமிருந்த ஒரு வீட்டினுள் நுழைந்து தாகத்திற்கு தண்ணீர் தாருங்கள் அம்மா என அங்கிருந்த பெண்ணிடம் கேட்டிருக்கின்றான். இவனது வாடிய முகத்தினைப் பார்த்த அந்தத் தாய் மனமிரங்கி தண்ணீரிற்குப் பதிலாக பாலினை ஒரு குவளை முழுவதும் நிரப்பி வழங்கினாள். மனநிறைவோடு பாலினை அருந்திய அச் சிறுவன் அத்தாயிடம் நன்றி கூறிவிட்டு அகன்றான்.
காலங்கள் பல கடந்த பின்னர்......
வயதாளியான அப் பெண்மணி மிகவும் பாரதூரமாக நோயினால் பாதிக்கப்பட்டார். தொடர்ச்சியான நீண்ட பரிசோதனைகளின் பின்னர் அவருக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்களால் பரிந்துரை வழங்கப்பட்டது. உடனடியாக நவீன தொழில் நுட்பத்தில் பெயர்போன ஒரு வைத்திய சாலையினில் அனுமதிக்கப்பட்ட அப்பொண்மணிக்கு சத்திர சிகிச்சையும் நடைபெற்று முடிந்தது.
சிகிச்சையின் பின்னர் வீடுநோக்கி புறப்பட இருந்த பெண்மணியிடம் வைத்தியச் செலவுகளுக்காகன பணம் செலுத்தும் பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது.
என்ன அதிசயம் பணம் முழுவதும் செலுத்தப்பட்டிருந்த அந்தப் பற்றுச் சீட்டில் சில வரிகள்.......
“அம்மா அன்று நீங்கள் கொடுத்துதவிய பாலினால் இன்று உயிர்வாழ்பவன்,
அன்று நீங்கள் உதவியிருக்காவிட்டால் இன்று நான்??????????????
கண்ணிலே நீர்ததும்ப நின்றிருந்த அந்தத் தாய்முன் சத்திர சிகிச்சை நிபுணராக அந்தச் சிறுவன்...
என்றோ ….. எங்கோ........ செய்யப்பட்ட சிறு உதவி, பெருவெள்ளமாக...................
இக்கதையினைச் சொன்ன அதே அதிகாரியிடமிருந்து இன்னொரு தகவல்......
இப்போது நீங்கள் எவ்வளவு தூரம் வளர்சியடைந்து விட்டீர்கள், என்றாவது ஒருநாள் உங்களை இவ் உலகிற்கு கூட்டிவந்த வைத்தியர்களை, உங்கள் உடலிலுள்ள தசைகளில், எலும்புகளில் சேதம் விளைவிக்காது, ஊனத்தோடு இருந்த உங்களை வாரியெடுத்து கழுவித் தூய்மையாக்கி உங்கள் தாயிடம் வழங்கிய தாதிமாரை நினைத்துப் பார்த்ததுண்டா நீங்கள்??????????
என்றாவது அவர்களிடம் சென்று நன்றி கூற நினைத்ததுண்டா நீங்கள்???????????
அவரது வினாக்களுக்கு விடை கூற நிரணியற்று தடுமாறியபடி நாங்கள்....
சிறிதளவு நேரத்தின் பின் மீண்டும் அவரிடமிருந்து ஒரு செய்தி,
“ உங்களால் அவர்களுக்கு செய்யப்பட வேண்டிய கடனை, உங்களை நாடிவருபவர்களுக்கு உதவுவதன் மூலம் காணிக்கையாக்குங்கள்”.
இன்றெனக்கு மிகவும் மனநிறைவைத் தந்திருக்கிறது இவரது இறுதிச் செய்தி.
உங்களுக்கு???
2 comments:
நீண்ட நாள் இடைவெளிக்கு பின் வந்த இந்தப்பதிவு அருமை கௌரி ...
தொடருங்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நண்பரே....
Post a Comment